என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பாட்னா சாகிப்
நீங்கள் தேடியது "பாட்னா சாகிப்"
நடிகர் சத்ருகன் சின்கா எம்.பி.யாக இருக்கும் பீகார் மாநிலம், பாட்னா சாகிப் பாராளுமன்ற தொகுதியில் இந்தமுறை மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் பாஜக வேட்பாளராக நிறுத்தப்படலாம் என தெரியவந்துள்ளது. #ShatrughanSinha #ShatrughanSinhacontest #PatnaSahib
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலில் நாடு முழுக்க மொத்தமுள்ள 543 தொகுதிகளிலும் ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மே 19-ம் தேதி வரை வாக்கு பதிவுகள் நடைபெற உள்ள நிலையில், மே 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல நடிகரும், பா.ஜனதாவில் இருக்கும் அதிருப்தியாளரும், பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னா சாகிப் தொகுதி எம்.பி.யுமான சத்ருகன் சின்கா கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி உள்ளார். அவர் பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதா தலைவர் அமித்ஷாவை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
பாஜகவின் மிக மூத்த உறுப்பினர் என்பதால் கட்சியின் மேலிடம் அவர் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. எனினும், வரும் பாராளுமன்ற தேர்தலில் இந்த முறை அவருக்கு பாட்னா சாகிப் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாது என்னும் பேச்சு பரவலாக உள்ளது.
இந்நிலையில், பாஜகவின் மத்திய தேர்தல் குழுவின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பல்வேறு மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.
கட்சியின் முக்கிய பிரமுகர்கள் யார் யாருக்கு எந்த தொகுதியை ஒதுக்குவது என்பது தொடர்பாக இந்த ஆலோசனையின்போது விவாதிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னா சாகிப் தொகுதியில் மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் போட்டியிடலாம் என இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதே தொகுதியில் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.கே.சின்காவை நிறுத்தவும் ஆலோசிக்கப்பட்டதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த சர்ச்சை தொடர்பாக சில நாட்களுக்கு முன்னர் பிரபல செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த சத்ருகன் சின்கா, (கட்சியின் முடிவு எதுவாக இருந்தாலும்) ‘நிலைமை எவ்வாறாக இருந்தாலும் மீண்டும் பாட்னா சாகிப் தொகுதியில் போட்டியிடுவேன்’ என தெரிவித்திருந்தது நினைவிருக்கலாம். #ShatrughanSinha #ShatrughanSinhacontest #PatnaSahib
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X